வணிகம்

இந்தியாவிலிருந்து கடந்த 20 ஆண்டுகளில் ரூ.2.5 லட்சம் கோடி பொருள்கள் கொள்முதல் செய்த வால்மார்ட்

செய்திப்பிரிவு

பெங்களூரு: அமெரிக்க நிறுவனமான வால்மார்ட் சர்வதேச அளவில் விற்பனையங்களைக் கொண்டுள்ளது. இந்தியாவிலுருந்தும் சிறு, குறு நிறுவனங்களிடமிருந்து தயாரிப்புகளைப் பெற்று அவற்றை சர்வதேச அளவில் விற்பனை செய்கிறது.

கடந்த 20 ஆண்டுகளில் 30 பில்லியன் டாலர் (ரூ.2.5 லட்சம் கோடி) மதிப்பிலான சரக்குகளை இந்தியாவிலிருந்து பெற்றதாக வால்மார்ட் நிறுவனத்தின் நிர்வாக துணைத் தலைவர் ஆண்ட்ரியா ஆல்பிரைட் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “இந்தியாவில் நாங்கள் கூடுதல் கவனம் செலுத்துகிறோம். இந்தியா அதிக வளர்ச்சியைக் கொண்ட சந்தை. இங்கு ஏராளமான சிறு, குறு விநியோகர்கள் உள்ளனர். அவர்களிடமிருந்து பொருள்களைப் பெற்று நாங்கள் சர்வதேச அளவில் விற்பனை செய்கிறோம்.

இந்தியாவில் உள்ள சிறு, குறு, நிறுவனங்களை தற்போதைய சூழலுக்கு ஏற்ப நவீனப்படுத்தவும் விரிவாக்கம் செய்யவும் முன்னெடுப்புகளை மேற்கொண்டுவருகிறோம். விநியோகம் சார்ந்து இங்குள் விநியோகர்களுக்கு பயிற்சி வழங்குகிறோம். இதுவரையில் 50 ஆயிரம் விநியோகர்களுக்கு பயிற்சி வழங்கியுள்ளோம். 2027-ம்ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் 10 பில்லியன் டாலர் (ரூ.83,000 கோடி) மதிப்பில் இந்தியாவில் இருந்து பொருள்களை கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளோம்” என்றார்.

SCROLL FOR NEXT