வணிகம்

எல்ஐசியின் புதிய மியூச்சுவல் ஃபண்ட் நிதித் திட்டம் அறிமுகம்

செய்திப்பிரிவு

சென்னை: எல்ஐசி மியூச்சுவல் ஃபண்ட் அசெட் மேனேஜ்மென்ட் நிறுவனம், ‘எல்.ஐ.சி. எம்.எஃப். நிஃப்டி மிட்கேப் 100 இ.டி.எஃப்.’ (LIC MF Nifty Midcap 100 ETF) என்ற புதிய நிதித் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தப் புதிய நிதித் திட்டம்குறித்து எல்ஐசி மியூச்சுவல் ஃபண்ட் அசெட் மேனேஜ்மென்ட் நிர்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான ரவிக் குமார் ஜா கூறுகையில், “சர்வதேச செலாவணி நிதியத்தின் அறிக்கையின்படி, வரும் ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி வலுவாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தற்போது நிலவும் சாதகமான சூழலை மனதில் கொண்டு இந்த நிதித் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளோம்” என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT