வணிகம்

சாமானிய மக்களுக்கான பட்ஜெட்டாக இருக்கும்: மத்திய நிதித்துறை இணை அமைச்சர்

செய்திப்பிரிவு

இன்று தாக்கல் செய்யப்படும் பட்ஜெட், சாமானிய மக்களுக்கு நன்மை பயக்கும் பட்ஜெட்டாக இருக்கும் என மத்திய நிதித்துறை இணை அமைச்சர் ஷிவ் பிரதாப் சுக்லா கூறியிருக்கிறார்.

2018-19-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இன்று (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு தாக்கல் செய்கிறார். மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பொறுப்பேற்ற பிறகு, அருண் ஜேட்லி தாக்கல் செய்யும் 5-வது பட்ஜெட் இதுவாகும். மேலும் இந்த அரசு தாக்கல் செய்யும் கடைசி முழு அளவிலான பட்ஜெட் இதுவாகும். 2019-ம் ஆண்டு மக்களவை பொதுத் தேர்தல் நடக்க இருப்பதால், அடுத்தாண்டு இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இன்றைய பட்ஜெட், "சாமானிய மக்களுக்கு பயனளிக்கும் வகையிலான பட்ஜெட்டாக இருக்கும். சிறந்த பட்ஜெட்டாக இருக்கும்" என மத்திய நிதித்துறை இணை அமைச்சர் ஷிவ் பிரதாப் சுக்லா கூறியிருக்கிறார்.

SCROLL FOR NEXT