சென்னை: கோடக் செக்யூரிட்டிஸ் பங்குச் சந்தை வர்த்தகர்களுக்காக ‘ட்ரேட் ஃப்ரீ ப்ரோ’ (Trade Free Pro) என்றத்திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது. இத்திட்டம், ‘பே லேட்டர்’(Pay Later) வசதியை ஆண்டுக்கு 9.75% வட்டி விகிதத்தில் வழங்குகிறது.
மேலும் இத்திட்டத்தின் கீழ்,பயனாளிகள் 1000-க்கும் மேற்பட்ட பங்குகளை வர்த்தகம் செய்யலாம் என்றும் கடன் பத்திரங்களை வாங்கும் திறனை அதிகரிக்க முடியும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கோடக் செக்யூரிட்டிஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜெய்தீப் ஹன்ஸ்ராஜ் கூறுகையில், “வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில், இந்தப் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளோம். இந்த திட்டத்தை ஆண்டுக்கு 9.75% என்ற எளிய வட்டி விகிதத்தில் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
இந்தியாவில் முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் ஆகிய இரு தரப்பினரும் விரும்பி அணுகும் பிராண்டாக நாங்கள் தொடர்ந்து இருப்பதை உறுதிசெய்ய எமது திட்டங்கள் மற்றும் கொள்கைகளை நாங்கள் தொடர்ந்து உருவாக்கி, மேம்படுத்தி வழங்குகிறோம்” என்றார்.