வணிகம்

தெலங்கானாவில் ரூ. 1,000 கோடியில் கோக் ஆலை

செய்திப்பிரிவு

குளிர்பானங்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள கோக கோலா நிறுவனம் தெலங்கானா பிராந்தியத்தில் பிரமாண்டமான ஆலையைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளது. இதற்காக இந்நிறுவனம் ரூ. 1,000 கோடியை முதலீடு செய்ய உள்ளதாக நிறுவனத்தின் செயல் துணைத் தலைவர் இரியல் ஃபினான் தெரிவித்தார்.

இந்த ஆலை அமைப்பது தொடர்பாக கோக கோலா மூத்த அதிகாரிகள் முதல்வர் கே. சந்திரசேகர ராவை சந்தித்துப் பேசினர். இந்த ஆலோசனையில் பிராந்திய தலைவர் டி. கிருஷ்ண குமாரும் பங்கேற் றார். தங்களது தயாரிப்புகளுக்கு தெலங்கான பிராந்தியத்தில் அமோக வரவேற்பு இருப்பதாக அதிகாரிகள் முதல்வரிடம் தெரிவித்தனர்.

பிராந்திய மேம்பாட்டு நடவடிக்கைகளை தங்கள் நிறுவனம் கட்டாயம் மேற்கொள்ளும் என்று முதல்வருக்கு அவர்கள் உறுதி அளித்தனர். இந்த ஆலை அமைப் பதற்கான தகுதியான இடத்தை மாநில அரசு நிச்சயம் ஒதுக்கித் தரும் என்று அதிகாரிகளிடம் முதல்வர் உறுதி அளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

SCROLL FOR NEXT