தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி முதல்முறையாக 7900 புள்ளிகளுக்கு மேலே முடிவடைந்தது. வர்த்தகத்தின் முடிவில் 22 புள்ளிகள் உயர்ந்து 7913 புள்ளியில் நிப்டி முடிவடைந்தது. வர்த்தகத்தின் இடையே 7929 என்ற அதிகபட்ச புள்ளியைத் தொட்டது.
இதேபோல சென்செக்ஸும் உயர்ந்து முடிவடைந்தது. சென்செக்ஸ் 59 புள்ளிகள் உயர்ந்து 26419 புள்ளியில் முடிவடைந்தது. ஆனால் மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் சென்செக்ஸ், நிப்டி அளவுக்கு உயரவில்லை.
பேங்க் நிப்டியும் புதிய உச்சத்தை தொட்ட வர்த்தகத்தின் முடிவில் பேங்க் நிப்டி 15,819 புள்ளியில் முடிவடைந்தது.டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வெள்ளிக்கிழமை உயர்ந்தது. இது கடந்த மூன்று வாரங்களில் இல்லாத ஏற்றமாகும். பின் ஒரு டாலர் 60.47 ரூபாயில் முடிவடைந்தது.
துறைவாரியாக பார்க்கும் போது ஐடி துறை குறியீடு 1.63 சதவீதம் உயர்ந்திருக்கிறது. இதற்கடுத்து வங்கி குறியீடு 1.03 சதவீதம் உயர்ந்திருக்கிறது. மாறாக ரியால்டி, எப்.எம்.சி.ஜி மற்றும் பவர் குறியீடு சரிந்து முடிவடைந்தது. சென்செக்ஸ் பங்குகளில் ஹிண்டால்கோ, எஸ்.பி.ஐ., ஹெச்.டி.எப்.சி வங்கி, இன்போசிஸ் மற்றும் டிசிஎஸ் ஆகியவை உயர்ந்து முடிவடைந்தன. மாறாக கோல் இந்தியா, ஹெ.டி.எப்.சி., பார்தி ஏர்டெல், ஹீரோமோட்டோ கார்ப் மற்றும் ஹெச்.யூ.எல். ஆகிய பங்குகள் சரிந்தன.
சிக்கலில் இருக்கும் புஷான் ஸ்டீல் நிறுவனத்தின் பங்கு தொடர்ந்து சரிந்து வருகிறது. வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் 5 சதவிதம் சரிந்து 124.40 ரூபாயில் முடிவடைந்தது. ஆகஸ்ட் முதல் தேதி இந்த பங்கு 394 ரூபாய்க்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.