மதுரை ஐடி பொறியாளர் மவுனிஷா உருவாக்கிய மேடை அலங்காரம் 
வணிகம்

பெண் தொழில்முனைவோர்களை உருவாக்க பயிற்சி: மதுரையில் அசத்தும் பெண் பொறியாளர்

சுப.ஜனநாயகச் செல்வம்

மதுரை: நிகழ்ச்சி ஏற்பாடுகள், மேடை அலங்கார வடிவமைப்புகள் மூலம் பெண்கள் சுயமாக சம்பாதிக்கவும், பெண் தொழில் முனைவோர்களை உருவாக்கவும் பயிற்சி அளிக்கிறார் மதுரையைச் சேர்ந்த மெளனிஷா. மதுரை கலைநகர் தபால்தந்தி நகரைச் சேர்ந்த முத்துராமலிங்கம் மகள் மவுனிஷா (28). தகவல் தொழில்நுட்ப பொறியாளரான இவர் ஐ.டி. துறையில் வேலைபார்த்து வந்தார்.

பின்னர், அதில் விருப்பமில்லாமல், சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்ற உத்வேகத்தோடு நிகழ்ச்சி ஏற்பாடுகள், மேடை அலங்காரப் பணிகளில் ஈடுபட்டுவருகிறார். கடந்த 4 ஆண்டுகளாக மதுரையில் நிகழ்ச்சி ஏற்பாடுகள், மேடை அலங்கார வடிவமைப்பில் ஈடுபடுவதோடு, இத்துறையில் புதிய தொழில்முனைவோரை உருவாக்கும் வகையில் பல பேருக்கு பயிற்சி அளித்து வருகிறார்.

இதுகுறித்து எம்.மவுனிஷா கூறியதாவது: ஐ.டி. துறையில் வேலை பார்த்தேன். சொந்தமாக தொழில் செய்ய முடிவெடுத்தபோது, நிகழ்ச்சி ஏற்பாட்டாளராக மாறினேன். திருமண விழாக்கள், பிறந்தநாள் விழாக்களில் அரங்குகள் வடிவமைப்பு செய்ய தொடங்கினேன். இந்த துறையில் நிறைய வேலைவாய்ப்புகள் உள்ளன.

நிகழ்ச்சி அலங்காரம்

குறிப்பாக பெண்களுக்கு பயிற்சி அளித்து வருகிறேன். போட்டோ, வீடியோ எடிட்டிங் செய்வது குறித்தும் பயிற்சி அளிக்கிறேன்.

மு.மவுனிஷா

நிகழ்ச்சி ஏற்பாடு, மேடை அலங்கார வடிவமைப்பு குறித்து பயிற்சி அளிப்பதற்காக மதுரையில் பயிற்சி மையம் ஏற்படுத்தி நடத்தி வருகிறேன் என்று கூறினார்.

SCROLL FOR NEXT