வணிகம்

டிசிபி வங்கி லாபம் ரூ. 45 கோடி

செய்திப்பிரிவு

டிசிபி வங்கி நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்) ரூ. 45 கோடியை லாபமாக ஈட்டியுள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் வங்கி ஈட்டிய லாபம் ரூ. 43 கோடியாக இருந்தது.

முதல் காலாண்டில் வங்கி வட்டி மூலமாக ஈட்டிய வருமானம் ரூ. 30.43 கோடியாகும். இதற்கான வரிச் செலவு ரூ. 8.59 கோடியாகும். வங்கியின் சேமிப்பு விகிதம் 27 சதவீதம் அதிகரித்து ரூ. 10,552 கோடியாக இருந்தது. வங்கி வழங்கிய கடன் அளழு 28 சதவீதம் அதிகரித்து ரூ. 8,291 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

மூலதன விகிதம் 13.63 சதவீதமாக உள்ளது. வங்கியின் வாராக் கடன் அளவு கட்டுக்குள் இருப்பதாக வங்கியின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி எம். நடராஜன் தெரிவித்தார். முதல் காலாண்டில் கூடுதலாக 33 கிளைகள் தொடங்கப்பட்டுள்ளன. இதனால் கிளைகளின் எண்ணிக்கை 88 இடங்களில் 134 ஆக உயர்ந்துள்ளது.

SCROLL FOR NEXT