வணிகம்

எல்ஐசி சார்பில் அரசியலமைப்பு தின கொண்டாட்டம்

செய்திப்பிரிவு

சென்னை: எல்ஐசி நிறுவனம் நேற்று முன்தினம் (நவ.26) அரசியலமைப்பு தினத்தை (சம்விதன் திவஸ்) கொண்டாடியது.

இந்த கொண்டாட்டத்தின்போது, எல்ஐசி தலைவர் சித்தார்த் மொஹந்தி தலைமையில் எல்ஐசியின் அனைத்து ஊழியர்களும் காணொலிக் காட்சி வாயிலாக அரசியலமைப்பு உறுதிமொழி ஏற்றனர். இதில், நாடெங்கிலும் உள்ள அனைத்து எல்ஐசி அலுவலகங்களில் இருந்தும் ஊழியர்கள் பங்கேற்றனர்.

எல்ஐசி தலைவர் தனது உரையில் சுதந்திரத்தின் மதிப்பு மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள ஜனநாயக மாண்புகளை எல்ஐசி நிறுவனம் கொண்டாடுவதாக கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT