சென்னை: பஜாஜ் ஃபின்சர்வ் அசெட் மேனேஜ்மென்ட் நிறுவனம் ‘பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்ட்’ என்னும் புதிய நிதித் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
இந்தத் திட்டம் குறித்து அந்நிறுவனம் கூறுகையில், “இந்தத் திட்டமானது நடத்தை அறிவியல் மற்றும் நிதி நுண்ணறிவு அணுகுமுறையை அடிப்படையாகக் கொண்டு செயல்படும். அதன்படி, நிதி ஒதுக்கீட்டைத் தீர்மானிப்பதற்கு நிறுவனங்களின் சந்தை போக்குகளை மட்டும் அடையாளம் காணாமல் அதன் நடத்தை அம்சங்களையும் இந்தத் திட்டம் பகுப்பாய்வு செய்யும். இதனால், முதலீட்டாளர்கள் நீண்ட காலத்திற்கு சிறந்த வருவாயைப் பெற முடியும்” என்று தெரிவித்துள்ளது.
இந்தத் திட்டம் குறித்து நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி திரு. கணேஷ் மோகன் கூறுகையில், “இந்தத் திட்டத்தில் நடத்தை அறிவியல் மற்றும் நிதி நுண்ணறிவு ஆகிய இரண்டும் நமது முதலீட்டு முடிவுகளை எடுக்க உதவுகின்றன. இதனால், இந்தத் திட்டம் முதலீட்டாளர்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். வரும் காலங்களில் இதுபோல் நடத்தை அறிவியல் அடிப்படையிலான திட்டங்கள் அதிக எண்ணிக்கையில் அறிமுகம் செய்யப்படும்” என்று தெரிவித்தார்.
இந்தத் திட்டத்திற்கான முதலீடு இன்று தொடங்கி டிசம்பர் 8-ம் தேதி நிறைவு பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.