வணிகம்

வரி தாக்கல் விவரத்தை சரிபார்க்க அறிவுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: வருமானவரி செலுத்துவோர், அவர்களின் கணக்கு விவரங்கள் ‘இ-வெரிஷிபிகேஷன்’ என்ற ஆன்லைன் மூலம் சரிபார்க்கும் நடைமுறை 2021-ல் அறிமுகப்படுத்தப்பட்டது.

அதில், https://incometaxindia.gov.in தளத்தில் வரி செலுத்துவோருக்கான இணைய பக்கத்தில் ஆண்டுக் கணக்கு விவரங்களுடன் நிதி பரிவர்த்தனைகள் இடம் பெற்றுள்ளன. வருமானவரி செலுத்துவோர் தாங்கள் தாக்கல் செய்த கணக்கு விவரங்கள் மற்றும் வங்கி நிதிப் பரிவர்த்தனைகள் குறித்து இதில் சரிபார்த்துக் கொள்ள வேண்டும். நிதிப் பரிவர்த்தனைக்கும், வரி கணக்கு அறிக்கைக்கும் இடையே முரண்பாடு இருந்தால் மேம்படுத்தப்பட்ட அறிக்கையை தாக்கல் செய்யலாம். சரியாக இருந்தால் சம்மதம் என ஆன்லைன் பதிவை மேற்கொள்ள வேண்டும் முரண்பாடுகள் இருந்தால் ஆவணங்கள், மூல ஆதாரங்களுடன் (சோர்ஸ்) ஒப்பிடப்பட்டு விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பப்படும் என வருமானவரித் துறை தெரிவித்து உள்ளது.

SCROLL FOR NEXT