கோப்புப்படம் 
வணிகம்

தீபாவளி பண்டிகை காலத்தில் இனிப்பு, கார வகைகள் உள்ளிட்ட ஆவின் பொருட்கள் ரூ.130 கோடிக்கு விற்பனை

செய்திப்பிரிவு

சென்னை: தீபாவளி பண்டிகை காலத்தில் இனிப்பு, கார வகைகள் உள்ளிட்ட ஆவின் பொருட்கள் ரூ.130 கோடிக்கு விற்கப்பட்டதாக ஆவின் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து அவர்கள் கூறும்போது, ‘‘தீபாவளியையொட்டி ஆவின் பால் பொருட்களுடன் இனிப்பு, கார வகைகள் விற்பனை கடந்த ஆண்டைவிட 10 சதவீதம் அதிகரித்து ரூ.130 கோடிக்கு விற்பனை நடைபெற்றுள்ளது. கடந்தஆண்டில் ரூ.115 கோடிக்கு விற்பனை நடைபெற்றது’’ என்றனர்.

SCROLL FOR NEXT