கோப்புப்படம் 
வணிகம்

நடப்பு நிதி ஆண்டில் ரூ.10.60 லட்சம் கோடி: நேரடி வரி வசூல்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: நடப்பு நிதி ஆண்டில் இதுவரை ரூ.10.60 லட்சம் கோடி நேரடி வரி வசூலாகியுள்ளது.

2022-23 நிதி ஆண்டில் ரூ.16.61 லட்சம் கோடி நேரடி வரி வசூலானது. 2023-24 நிதி ஆண்டுக்கு ரூ.18.23 லட்சம் கோடி வரி வசூல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. நடப்பு நிதி ஆண்டில் இதுவரை ரூ.10.60 லட்சம் கோடி வரி வசூலாகியுள்ளது. இது நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் 58 சதவீதம் ஆகும். தனிநபர் வருமான வரி, நிறுவன வரி உள்ளிட்டவை நேரடி வரி வகையின் கீழ் வருபவை ஆகும்.

அதன்படி, சென்ற நிதி ஆண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பு நிதி ஆண்டில் இதுவரை தனிநபர் வருமான வரி வசூல் 32 சதவீதமும் நிறுவன வரி வசூல் 13 சதவீதமும் உயர்ந்துள்ளது.

SCROLL FOR NEXT