வாரத்துக்கு 70 மணி நேர வேலை பார்ப்பது அறவே உற்பத்தி திறனை அதிகரிக்காது. மாறாக அதற்கு எதிராக இது வேலை செய்யும் என போர்ட்ஃபோலியோ மேனேஜ்மென்ட் சேவை நிறுவனமான ஃபர்ஸ்ட் குளோபல் குழும நிறுவனர் டெவினா மெஹ்ரா கருத்து தெரிவித்துள்ளார்.
கடந்த அக்டோபர் மாத இறுதியில் இந்திய இளைஞர்கள் வாரத்துக்கு 70 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும் என இன்ஃபோசிஸ் நிறுவனர்களில் ஒருவரான நாராயண மூர்த்தி தெரிவித்திருந்தார். இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் பலர் தங்களது கருத்தை தெரிவித்திருந்தார். அந்த வரிசையில் லேட்டஸ்டாக இணைந்துள்ளார் டெவினா மெஹ்ரா.
“பொதுவாக நீண்ட நேரம் வேலை பாரத்தால் உற்பத்தித் திறன் சார்ந்த வெளிப்பாடு மங்கும். இந்த புரிதல் உலக அளவில் உள்ளது. அதனால் 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என சொல்வது எதற்கும் உதவாது. மேலும், வேலையை தவிர ஊழியர்களுக்கு உள்ள பிற பொறுப்புகளை கவனிக்க முடியாத சூழலை இது உருவாக்கலாம்.
ஒரு முதலாளியாக, நான் அவுட்புட்டில் கவனம் செலுத்துகிறேன். ஆனால், வேலை நேரத்தில் நான் கவனம் செலுத்தவில்லை” என அவர் தெரிவித்துள்ளார்.