கடந்த டிசம்பர் மாதத்தில், கார் விற்பனையில் முதல் பத்து இடங்களில் மாருதி மற்றும் ஹூண்டாய் நிறுவன தயாரிப்புகள் அதிக அளவில் இடம் பிடித்துள்ளன.
இதுகுறித்து இந்திய வாகன உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு கூறியுள்ளதாவது:
கடந்த 2017ம் ஆண்டு டிசம்பரில் கார் விற்பனை, முந்தைய 2016ம் ஆண்டு டிசம்பரை ஒப்பிடுகையில் அதிகரித்துள்ளது. இதில், மாருதி நிறுவனத்தின் அல்டோ (Alto) மாடல் கார் முதலிடம் பிடித்துள்ளது. இந்த கார்கள் 20,346 என்ற எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ளன.
இரண்டாவது இடத்தில் உள்ள மாருதி நிறுவனத்தின் சிடன் டிஸயர் (sedan Dzire) 14,643 கார்கள் விற்பனையாகியுள்ளன. மாருதி நிறுவனத்தின் Baleno மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்த கார்கள் 14,551 என்ற எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ளன. ஹுண்டாய் நிறுவனத்தின் கிராண்டி 10 (Grandi10) கார் 12,955 கார்களுடன் நான்காவது இடத்தில் உள்ளது. மாருதி நிறுவனத்தின் வேகன் ஆர் 11,800 கார்கள் விற்பனையுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது.
சொகுசு காரான வித்ரா பிரீஸா (Vitara Brezza) ஆறாவது இடத்தில் உள்ளது. இந்த கார்கள் 11,540 என்ற எண்ணிக்கையில் விற்னையாகியுள்ளன. ஹூண்டாய் நிறுவனத்தின் எலைட் ஐ 20 (Elite i20) ஏழவாது இடத்தில் 9,847 உள்ளது. ஸ்விப்ட் (Swift) 9,793 கார்களுடன் எட்டாவது இடத்தில் உள்ளது. ரெனால்டு நிறுவனத்தின் கிவித் (Kwid) 6,953 கார்களுடனும், ஹுண்டாய் நிறுவனத்தின் கிரீட்டா (Creta) 6,755 கார்கள் விற்பனையாகியுள்ளன.