சாவித்ரி ஜிண்டால் | கோப்புப்படம் 
வணிகம்

இந்தியாவின் டாப் 10 பணக்காரர்கள்: பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒரே பெண் தொழிலதிபர்!

செய்திப்பிரிவு

சென்னை: இந்தியாவின் டாப் 10 பணக்காரர்கள் பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் இடம் பெற்றுள்ள ஒரே பெண் தொழிலதிபராக உள்ளார் சாவித்ரி ஜிண்டால். ப்ளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள உலக பணக்காரர்கள் பட்டியலில் இந்த விவரம் தெரியவந்துள்ளது.

பெட்ரோ கெமிக்கல், எண்ணெய் மற்றும் எரிவாயு, டெலிகாம் மற்றும் ரீடெயில் மாதிரியான தொழில்களில் ஈடுபட்டு வரும் ரிலையன்ஸ் குழுமத் தலைவராக உள்ள முகேஷ் அம்பானி, இந்தியாவின் டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். சர்வதேச அளவில் அவர் 11-வது இடத்தில் உள்ளார். அவரது மொத்த சொத்து மதிப்பு ரூ.7.13 லட்சம் கோடி. இரண்டாம் இடத்தில் அதானி குழும தலைவர் கெளதம் அதானி உள்ளார். அவரது மொத்த சொத்து மதிப்பு ரூ.5.17 லட்சம் கோடி.

இந்திய அளவிலான டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளார் சாவித்ரி ஜிண்டால். அவரது மொத்த சொத்து மதிப்பு ரூ.1.53 லட்சம் கோடி. சர்வதேச அளவில் 82-வது இடத்தில் அவர் உள்ளார். ஜிண்டால் குழுமத்தின் கௌரவத் தலைவராக செயல்பட்டு வருகிறார்.

இந்தியாவின் டாப் 10 பணக்காரர்கள்

  • முகேஷ் அம்பானி - ரூ.7.13 லட்சம் கோடி
  • அதானி - ரூ.5.17 லட்சம் கோடி
  • ஷபூர் பலோன்ஜி மிஸ்திரி - ரூ.2.60 லட்சம் கோடி
  • ஷிவ் நாடார் - ரூ.2.36 லட்சம் கோடி
  • அசிம் பிரேம்ஜி - ரூ.1.94 லட்சம் கோடி
  • சைரஸ் பூனாவாலா - ரூ.1.56 லட்சம் கோடி
  • சாவித்ரி ஜிண்டால் - ரூ.1.53 லட்சம் கோடி
  • திலீப் சங்வி - ரூ.1.52 லட்சம் கோடி
  • ராதாகிருஷ்ணன் தாமினி - ரூ.1.44 லட்சம் கோடி
  • லட்சுமி மிட்டல் - ரூ.1.41 லட்சம் கோடி
SCROLL FOR NEXT