தமிழ்நாட்டில் சாகுபடி செய்யப்படும் நிலப்பரப்பில் 60 விழுக்காடு மானாவாரி நிலங்களாகவே உள்ளது. மக்கள் தொகை பெருக்கத்தின் காரணமாக அதிகரித்து வரும் உணவுத் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் காடுகள் பெருமளவில் அழிக்கப்படுகின்றன. வேளாண் நிலங்களில் மரங்களை பயிரிட்டு, விவசாயிகளின் வருமானத்தை பெருக்கிக்கொள்ள உதவும் பண்ணையமே வேளாண் காடுகளாகும். வேளாண் நிலங்களில் மரங்கள் வளர்ப்பதால் கிடைக்கும் பயன்கள்:
# மண் அரிப்பை தடுக்கின்றது.
# மக்கிய இலைகள் மூலமாகவும், மரங்களின் வேரில் இருக்கும் வேர் முடிச்சுகள் மூலமாகவும் மண் வளத்தை கூட்டுகின்றது.
# காற்றின் வேகத்தை கட்டுப்படுத்துகின்றது
# களர் - உவர் போன்ற பிரச் சினைக்குரிய மண் வகைகளை திருத்தி அமைக்கின்றது.
# பயிர்கள் இல்லாத காலங்களில் மரங்கள் இருப்பதால் நீரோட்டம் குறைக்கப்பட்டு மண்வளம் காக்கப்படுகின்றது.
# தட்பவெப்ப நிலையை சீர்செய்து பயிர்களின் உற்பத் தியை அதிகரிக்கின்றது.
# மானாவாரி நிலங்களில் விறகுக்கு ஏற்ற மரங்களை வளர்ப்பதன் மூலம் சாணம் மற்றும் வேளாண் கழிவுப் பொருட்கள் எரிபொருளாக பயன்படுத்துவது தடுக்கப் பட்டு உரமாக பயன்படுத்தப் படுகின்றது.
# தீவனப் பயிர்கள் சாகுபடி செய்ய தனிநிலம் ஒதுக்க வேண்டிய அவசியம் தவிர்க்கப்பட்டு அதில் உணவு தானியங்களை பயிரிட்டு உற்பத்தியை கூட்ட வழிவகை செய்கின்றது.
# மழைவளம் பெருக உதவுகின்றது.
# மரங்கள், பறவைகளின் இருப்பிடமாததால் பயிர்களில் பூச்சிகளின் தொல்லை மறை| முகமாகக் குறைக்கப் படுகிறது.
மேலும் விவரங்களுக்கு:
98653 66075 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.