சென்னையில் நடைபெற்ற எம்எஸ்எம்இ பிசினஸ் ஸ்கேல்-அப் உச்சி மாநாட்டின்போது தமிழ்நாடு அணியின் அனைத்து உறுப்பினர்களும் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். 
வணிகம்

சென்னையில் எம்எஸ்எம்இ பிசினஸ் ஸ்கேல்-அப் உச்சி மாநாடு

செய்திப்பிரிவு

சென்னை: மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் ஊக்குவிப்பு கவுன்சில் சார்பில் சென்னையில் எம்எஸ்எம்இ பிசினஸ் ஸ்கேல்-அப் உச்சி மாநாடு நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் தமிழ்நாடு தலைவர் எம்.வி.சவுத்ரி மற்றும் பிற நியமன உறுப்பினர்கள் உட்பட தமிழ்நாடு அணியின் அனைத்து உறுப்பினர்களும் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

தொழிற்சங்கம், மாநில அரசு, நிதி நிறுவனங்கள், ஆதரவளிக்கும் அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் போன்ற துறைகளின் பல்வேறு ஸ்டேக் ஹோல்டர்களால் திட்டங்கள், நன்மைகள் சலுகைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது மற்றும் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து விவாதிப்பது இதன் நோக்கமாகும்.

நிகழ்ச்சியில் எம்எஸ்எம்இ மத்திய அமைச்சர் நாராயண் டி.ரானே உரையாற்றும்போது, எம்எஸ்எம்இ துறையை மேம்படுத்துவதற்கான கவுன்சிலின் முயற்சிகளைப் பாராட்டினார். பிரதமரின் ‘ஆத்ம நிர்பார் பாரத்’ இலக்கை அடைய துறை பணிகளைச் செய்து வருகிறது என்றார்.

நிகழ்ச்சியில் எம்எஸ்எம்இ ஊக்குவிப்பு கவுன்சில் தேசிய தலைவர் இ.முத்துராமன், தமிழ்நாடு தலைவர் எம்.வி.சவுத்ரி, துணைத் தலைவர் அருண் சுரேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT