வணிகம்

பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு முன்னுரிமை - நிர்மலா சீதாராமன்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஜி20 உச்சி மாநாட்டில் நேற்று பங்கேற்ற மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டு வருவதே அரசின் முதன்மையான நடவடிக்கை. அதற்காக, வட்டி விகிதங்களை உயர்த்துவது மட்டுமே தீர்வாக அமையாது.

பல வழிமுறைகளில் பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் முதலீடு செய்ய பன்னாட்டு நிறுவனங்களுக்கு மிகவும் சாதகசூழல் நிலவுகிறது.இந்திய பொருளாதாரத்தின் ஒவ்வொரு அங்கமும் சிறப்பான அளவில் வளர்ந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT