தமிழ்நாடு மகளிர் தொழில்முனைவோர் நலச் சங்க தலைவர் கிருஷ்ணா ராதாகிருஷ்ணன் 
வணிகம்

தூத்துக்குடியில் ஆக.27-ல் தமிழ்நாடு மகளிர் தொழில்முனைவோர் நல சங்கம் சார்பில் கருத்தரங்கம், கைத்தொழில் பயிற்சி

செய்திப்பிரிவு

சென்னை: வரும் ஆகஸ்ட் 27-ம் தேதி அன்று காலை 9 மணி முதல் ஐந்து மணி வரை தூத்துக்குடி காமராஜ் கல்லூரி அரங்கத்தில் கருத்தரங்கம் மற்றும் கைத்தொழில் பயிற்சி நடைபெற உள்ளதாக தமிழ்நாடு மகளிர் தொழில்முனைவோர் நலச் சங்கம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு மகளிர் தொழில்முனைவோர் நலச் சங்க தலைவர் கிருஷ்ணா ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு மகளிர் தொழில்முனைவோர் நலச் சங்கம் பெண்களுக்காக தொழில் பயிற்சிகள் மற்றும் தொழில் தொடங்க அனைத்து உதவிகளும் சேவை மனப்பான்மையுடன் அனைத்து மாவட்டங்களிலும் செய்து வருகிறது. வரும் ஞாயிற்றுக்கிழமை ஆகஸ்ட் 27 ம் தேதி அன்று காலை 9 மணி முதல் ஐந்து மணி வரை தூத்துக்குடி காமராஜ் கல்லூரி அரங்கத்தில் கருத்தரங்கம் மற்றும் கைத்தொழில் பயிற்சி நடைபெற உள்ளது.

இந்த கருத்தரங்கத்தில் மத்திய மாநில அரசின் திட்டங்கள் உதயம் தொழில் பதிவு விபரங்கள் மற்றும் சிறந்த மகளிர் தொழில்முனைவோருக்கான விருதுகள் தொழில் தொடங்க தேவைப்படும் பெண்களுக்கு விரைவான கடன் வசதி மற்றும் அவர்கள் உற்பத்தி செய்துள்ள பொருட்களைக் கொண்ட விற்பனை கூடங்கள் போன்றவை நடைபெற உள்ளன.

இத்துடன் மகளிருக்கு தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கைத்தொழில் பயிற்சிகளும் கைதேர்ந்த வல்லுநரால் கற்றுத் தரப்பட உள்ளது. ஹெர்பல் நாப்கின் சாக்லேட் சோப்பு பவுடர் பினாயில் சாம்பிராணி மிதியடி போன்றவை கற்றுத்தர ப்பட உள்ளது. இதற்கு மூலப்பொருட்கள் எங்கு கிடைக்கும் மார்க்கெட்டிங் எவ்வாறு செய்ய வேண்டும் எவ்வாறு இதற்கு பதிவு செய்ய வேண்டும் என்ற விபரங்களும் பயிற்சியில் வழங்கப்பட உள்ளது. இந்த நிகழ்வுக்கு எந்தவித கட்டணமும் கிடையாது ஆனால் முன் பதிவு அவசியம். கலந்து கொள்ளும் கல்லூரி மாணவிகளுக்கு இ-சர்டிபிகேட் வழங்கப்படும்.

முன்பதிவுக்கு குறுந்தகவல் செய்ய வேண்டிய எண்கள்: 9361086551, 7871702700 மேலும் சங்கத்தின் மூலமாக உறுப்பினராகி பயன்கள் பெற விரும்பினால் உங்களது ஆண்ட்ராய்டு போனில் form.wewatn.comல் பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT