வணிகம்

பிரதமர் தலைமையில் இன்று திட்டக் கமிஷன் கூட்டம்

செய்திப்பிரிவு

பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான திட்டக் கமிஷன் கூட்டம் புதன்கிழமை நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நிலவரம் குறித்து ஆராயப்படும்.

பிரதமர் மன்மோகன் சிங், திட்டக் கமிஷன் தலைவராகவும் உள்ளார். இவர் தலைமையில் நடைபெறும் கடைசி திட்டக்கமிஷன் கூட்டம் இதுவாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மத்திய அரசின் பதவிக் காலம் முடியும்போது திட்டக் கமிஷன் தலைவர் பதவிக் காலமும் முடியும். இப்போது மக்களவைக்குத் தேர்தல் நடைபெற்று வருகிறது. புதிதாக பொறுப்பேற்கும் அரசுக்கு தான் தலைவராக இருக்கப் போவதில்லை என்று மன்மோகன் சிங் திட்டவட்டமாகக் கூறிவிட்டார்.

புதன்கிழமை நடைபெற உள்ள கூட்டத்தில் திட்டக் கமிஷனின் அனைத்து உறுப்பினர்களும் பங்கேற்பார்கள் என்று தெரிகிறது. கடந்த 10 ஆண்டுகளாக திட்டக் கமிஷனின் தலைவராக உள்ள மன்மோகன் சிங்குக்கு அனேகமாக இந்தக் கூட்டத்தில் பிரிவு உபசார விழா நடத்தப்படும்.

SCROLL FOR NEXT