வணிகம்

கடந்த 2022-23-ம் நிதி ஆண்டில் சென்னை துறைமுகம் ரூ.156 கோடி நிகர உபரி வருவாய்

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை தண்டையார்பேட்டை பாபு ஜெகஜீவன் ராம் மைதானத்தில் நடந்த சுதந்திர தின விழாவில், சென்னை துறைமுக பொறுப்புக் கழக தலைவர் சுனில் பாலிவால் பேசியதாவது: சென்னை துறைமுகம் இந்த ஆண்டில் 48.95 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டுள்ளது. கடந்த 2022-23-ம் ஆண்டில் சென்னை துறைமுகம் ரூ.156.06 கோடி நிகர உபரி வருவாய் ஈட்டியுள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளில் ஈட்டிய அதிகபட்ச வருவாய் ஆகும்.

சென்னை துறைமுகம் - மதுரவாயல் புதிய உயரடுக்கு மேம்பாலம், மப்பேட்டில் சரக்கு பூங்காஆகியவற்றுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியுள்ளார். இவை சென்னை துறைமுகத்தின் வளர்ச்சிக்கும், தமிழகத்தின் வளர்ச்சிக்கும் முக்கிய பங்கு வகிக்கும்.துறைமுக பள்ளி, விளையாட்டு மைதானம் ஆகியவையும் சரிசெய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT