கோப்புப்படம் 
வணிகம்

2021-22 நிதி ஆண்டில் ரூ.1,159 கோடி வரி செலுத்திய இந்திய கிரிக்கெட் வாரியம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) 2021-22 நிதி ஆண்டில் ரூ.1,159 கோடி வரி செலுத்தியுள்ளது. அதற்கு முந்தைய நிதி ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 37 சதவீதம் அதிகம் ஆகும்.

கடந்த 5 நிதி ஆண்டுகளில் பிசிசிஐ செலுத்திய வரி விவரங்களை மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, பிசிசிஐ 2021-22 நிதி ஆண்டில் ரூ.7,606 கோடி வருமானம் ஈட்டியுள்ளது. அதன் செலவினம் ரூ.3,064 கோடியாக உள்ளது. மொத்தம் ரூ.1,159 கோடி வரி செலுத்தியுள்ளது.

2020-21 நிதி ஆண்டில் அதன் வருவாய் ரூ.4,735 கோடியாகவும், செலவினம் ரூ.3,080 கோடியாகவும் இருந்தது. அந்நிதியாண்டில் ரூ.845 கோடி வரி செலுத்தியது.

2020-21 நிதி ஆண்டுடன் ஒப்பிடுகையில், பிசிசிஐ 2021-22 நிதி ஆண்டில் 37 சதவீதம் கூடுதலாக வரி செலுத்தியுள்ளது.

2019-20 நிதி ஆண்டில் ரூ.883 கோடி, 2018 – 19 நிதி ஆண்டில் ரூ.815 கோடி, 2017 – 18 நிதி ஆண்டில் ரூ.597 கோடி பிசிசிஐ வரி செலுத்தியுள்ளதாக அமைச்சர் பங்கஜ் சவுத்ரி குறிப்பிட்டுள்ளார்.

பிசிசிஐ தாக்கல் செய்த வருமான வரி கணக்கின் அடிப்படையில் அவர் இந்தத் தகவலைக் குறிப்பிட்டார். வரும் ஆண்டுகளில் பிசிசிஐ வருமானம் இன்னும் பல மடங்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT