அங்கித் மேத்தா 
வணிகம்

கல்லூரியில் தொடங்கி பங்கு சந்தையில் நுழைந்த நாட்டின் முதல் ஸ்டார்ட் அப் நிறுவனம்

செய்திப்பிரிவு

மும்பை: இந்தியாவில் கல்லூரி வளாகத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனமான ஐடியாபோர்ஜ் (ideaForge), பங்குச் சந்தையில் பட்டியலாகியுள்ளது. இந்நிறுவனம், கல்லூரி வளாகத்தில் தொடங்கப்பட்டு பங்குச் சந்தையில் நுழையும் முதல் ஸ்டார்ட் அப் நிறுவனம் என கூறப்படுகிறது.

இந்நிறுவனம் ஐஐடி பாம்பேயில் பயின்ற முன்னாள் மாணவர்களால் 2007-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. கல்லூரி வளாகத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனம், தற்போது இந்தியாவின் முக்கியமான ட்ரோன் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது.

கடந்த ஜூலை மாதம் 7-ம் தேதி இந்நிறுவனம் பங்குச் சந்தையில் பட்டியலானது. இதுகுறித்து நிறுவன இணை நிறுவனரும் தலைமைச் செயல் அதிகாரியுமான அங்கித் மேத்தா கூறுகையில், “2004-ம் ஆண்டு ஐஐடி பாம்பே வளாகத்தில் படிக்கும்போதே எங்களது நிறுவனத்தின் பயணம் தொடங்கிவிட்டது. கல்லூரி வளாகத்தில் உள்ள பைக் இன்ஜின்களை ஆய்வகத்துக்கு எடுத்துச் சென்று புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்துவோம். படிப்படியாக முன்னேறிய நாங்கள், தற்போது ட்ரோன் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறோம்” என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT