வணிகம்

சென்னையில் எல்இடி விளக்கு தயாரிக்கும் தொழிற்சாலை

செய்திப்பிரிவு

ஜெர்மனியைச் சேர்ந்த லைட் மாஸ்டர்ஸ் நிறுவனம் சென்னையில் எல்இடி விளக்குகளைத் தயாரிக்கும் தொழிற்சாலையை தொடங்க உள்ளது. ரூ. 15 கோடி முதலீட்டில் இந்த ஆலை தொடங்கப்படுகிறது.

இந்த ஆலையில் மாதத்துக்கு 50 ஆயிரம் எல்இடி விளக்குகள் உற்பத்தி செய்யப்படும். மிகவும்மெல்லியதான எல்இடி விளக்குகள், டியூப் லைட் டுகள், அதிக ஒளி உமிழும் பெரிய தெரு விளக்குகள் ஆகியவை இந்த ஆலையில் உற்பத்தி செய்யப்படும் என்று நிறுவனத்தின் தலைவர் ஜேம்ஸ் பலமுட்டெம் தெரிவித்தார். ஆரம்பத்தில் ஆலையில் தயாரிக்கப்படும் விளக்குகள் தென் மாநிலங்களில் விற்பனை செய்யப்படும்.

பின்னர் பிற பகுதிகளுக்கு விரிவுபடுத்தப்படும் என்றார். முதல் ஆண்டில் ரூ. 50 கோடி விற்பனை வருமானத்தை ஈட்டவும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் ரூ. 200 கோடியை எட்டவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT