வணிகம்

வர்த்தக பயன்பாடு சிலிண்டர் விலை குறைப்பு: சென்னையில் விலை ரூ.1,852.50

செய்திப்பிரிவு

மும்பை: வர்த்தகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைந்துள்ளன. இதன்படி, 19 கிலோ எடையுள்ள வர்த்தகப் பயன்பாட்டு சிலிண்டரின் விலை சென்னையில் இன்று (ஆகஸ்ட் 1) முதல் ரூ.1,852.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை ஒவ்வொரு மாநிலத்திலும் வரிகளுக்கு ஏற்ப மாறுபடுகிறது.

சர்வதேச சந்தை நிலவரம், அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அவ்வப்போது நிர்ணயித்து வருகின்றன.

அதன்படி வர்த்தகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் இன்று ஆகஸ்ட் மாதத்தின் முதல் நாளில் குறைந்துள்ளன.

விலை நிலவரம் மெட்ரோ நகரங்கள் வாரியாக

டெல்லி ₹1,680
மும்பை ₹1,802
சென்னை ₹1,640

கொல்கத்தா
₹1,852.50


வீட்டில் சமையல் செய்ய பயன்படுத்தும் சிலிண்டரின் விலையில் மாற்றம் இல்லை. மார்ச் 1 ஆம் தேதிக்குப் பின்னர் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலை எந்த மாற்றமும் இன்றி தொடர்கிறது. அவற்றின் விலை மெட்ரோ நகரங்கள் வாரியாக கீழே பட்டியலிடப்படுகிறது.

டெல்லி ₹1,103
மும்பை ₹1,129
சென்னை ₹1,102.50

கொல்கத்தா
₹1,118.50
SCROLL FOR NEXT