வணிகம்

இந்தியாவுக்கு 105 பயணி​கள் விமானங்கள்: ரஷ்ய அரசின் யுனைடெட் ஏர்கிராப்ட் நிறுவனம் அறிவிப்பு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: டெல்லி பாரத் மண்​டபத்​தில் சர்​வ​தேச தொழில் கண்காட்சி நேற்று தொடங்​கியது. இந்த கண்​காட்​சி​யில் ரஷ்ய அரசு நிறு​வன​மான யுனைடெட் ஏர்கிராப்ட் கார்ப்பரேஷன் (யுஏசி) உட்பட 200-க்​கும் மேற்​பட்ட பன்​னாட்​டு, இந்​திய நிறு​வனங்​கள் பங்கேற்று உள்​ளன.

கண்​காட்​சி​யின் முதல் நாளான நேற்று ரஷ்​யா​வின் யுஏசி நிறுவனத்​துக்​கும் 3 இந்​திய விமானப் போக்​கு​வரத்து நிறுவனங்களுக்கும் இடையே ஒப்​பந்​தங்​கள் கையெழுத்​தாகின. இதன்​படி யுஏசி நிறுவன தயாரிப்​பான ஐஎல்​-114-300 ரகத்​தைச் சேர்ந்த 105 பயணி​கள் விமானங்​கள் இந்​திய நிறு​வனங்​களுக்கு விநி​யோகம் செய்​யப்பட உள்​ளன.

டெல்​லியை தலை​மை​யிட​மாகக் கொண்டு செயல்​படும் பினாக்கிள் ஏர் நிறு​வனத்​துக்கு 50, ஹரி​யா​னா​வின் குர்​கான் நகரை தலை​மை​யிட​மாகக் கொண்டு செயல்​படும் ஸ்லீக் நிறுவனத்​துக்கு 35, கேரளாவின் ஏர் கேரளா நிறு​வனத்​துக்கு 20 விமானங்​கள் விநி​யோகம் செய்​யப்​படும் என்று யுஏசி நிறு​வனம் அறி​வித்​துள்​ளது. ரஷ்​யா​வின் ஐஎல்​-114-300 ரக விமானம், 68 இருக்கைகள் கொண்​ட​தாகும்.

ஒரு​முறை எரிபொருள் நிரப்​பி​னால் 2,000 கி.மீ. தொலைவு வரை தரை​யிறங்​காமல் பறக்​கும். சுமார் 25,000 அடி உயரத்​தில் மணிக்கு 500 கி.மீ. வேகத்​தில் பறக்​கும் திறன் கொண்​ட​தாகும். யுஏசி தலை​மைச் செயல் அதி​காரி வாடிம் படேகா கூறும்​போது “இந்​தி​யா​விலேயே ஐஎல்​-114-300 ரக விமானங்​களை தயாரிக்க திட்​ட​மிடப்​பட்டு உள்​ளது. இதுதொடர்​பாக இந்த ஆண்டு இறுதியில் ஒப்​பந்​தம் கையெழுத்​தாகும்” என்​றார்.

SCROLL FOR NEXT