வணிகம்

ரூ. 100 கோடி முதலீட்டில் சிறிய வங்கிகள்: ஆர்பிஐ

செய்திப்பிரிவு

உள்ளூரில் மட்டும் செயல்படக் கூடிய சிறிய வங்கிகள் தொடங்குவதற்கான வழிகாட்டு நெறிகளை ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெளியிட்டுள்ளது. பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட ஒரு வாரத்துக்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

விவசாயிகளுக்கு மற்றும் சிறிய அளவிலான தொழில்களுக்கு கடன் வழங்கும் வங்கிகளைத் தொடங்குவதற்கு மூலதன அளவு ரூ. 500 கோடி என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இப்போது ரூ. 100 கோடி போதும் என ரிசர்வ் வங்கி திருத்தம் செய்து வெளியிட் டுள்ளது. சமுதாயத்தில் மிகவும் பின்தங்கிய மக்கள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் ஆகியோருக்கு உதவும் வகையில் இந்த வங்கிகள் செயல்படும்.

வழக்கமான வங்கிகளிலிருந்து இந்த சிறிய வங்கிகளின் செயல்பாடு மாறுபட்டிருக்கும். பெருமளவு மக்களுக்கு வங்கிச் சேவை கிடைக்க வேண்டும் என்ற இலக்கை எட்டும் வகையில் இந்த வங்கிகள் செயல்படும். இந்த வங்கிகள் வழக்கமாக மேற்கொள்ளப்படும் சேமிப்புகள் மற்றும் கடன் வழங்குதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும். இத்தகைய வங்கிகளை தொடங்குவதில் அந்நிய நேரடி முதலீடு (எப்டிஐ) விதிகளுக்கு உள்பட்டு அனுமதிக்கப்படும்.

ஏற்கெனவே செயல்படும் வங்கியல்லாத நிதி நிறுவனங்கள், நிறுவனங்களின் வங்கிகள், கூட்டுறவு அமைப்புகள், சூப்பர் மார்க்கெட் உள்ளிட்ட அமைப்புகள் இந்த சிறிய வங்கிகள் அமைக்க விண்ணப்பிக்கலாம்.

SCROLL FOR NEXT