வணிகம்

ஹோண்டா ‘மொபிலோ’ அறிமுகம்

செய்திப்பிரிவு

ஜப்பானைச் சேர்ந்த ஹோண்டா நிறுவனம் எம்பிவி பிரிவில் புதிய ரகக் காரை அறிமுகப்படுத்தியுள்ளது. மொபிலோ என்ற பெயரில் வெளிவந்துள்ள இந்த காரின் விலை ரூ. 6.49 லட்சம் முதல் ரூ. 10.86 லட்சம் வரையாகும்.

2017-ம் ஆண்டில் நிறுவனத்தின் வாகன விற்பனை 3 லட்சமாக உயர்த்த வேண்டும் என்ற இலக்கை மையமாகக் கொண்டு இப்புதிய ரகக் கார் அறிமுகப்படுத்தப்பட்டதாக நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி யோஷியுகி மட்ஸுமோடோ கூறினார். மாருதி நிறுவனத்தின் எர்டிகா மற்றும் ஜெனரல் மோட்டார்ஸின் என்ஜாய் மாடல் கார்களுக்குப் போட்டியாக இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

7 பேர் பயணிக்கும் வகையில் வெளிவந்துள்ள இந்த மாடல் காரின் (பெட்ரோல்) விலை டெல்லியில் ரூ. 6.49 லட்சம் முதல் ரூ. 8.49 லட்சம் வரை உள்ளது.. டீசல் கார் விலை ரூ. 7.89 லட்சம் முதல் ரூ. 10.86 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவில் ஏற்கெ னவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மொபிலோ இதுவரை 46 ஆயிரம் கார்கள் விற்பனையானதாக மட்ஸுமோடோ கூறினார். 2017-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் 60 லட்சம் கார்களை சர்வதேச அளவில் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகக் கூறி னார். இது பாங்காக்கில் உள்ள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தில் வடிவமைக்கப்பட்டது.

SCROLL FOR NEXT