புதுடெல்லி: அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு நிறுவனமான ஜிகியூஜி பார்ட்னர்ஸ் மற்றும் இதர முதலீட்டாளர்கள் அதானி குழுமத்தில் 900 மில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர்.
இது, இந்திய மதிப்பில் ரூ.7,380 கோடி முதலீடாகும் என்று அதானியின் நெருங்கிய குடும்ப வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. உலக கோடீஸ்வரர் கவுதம் அதானிக்கு சொந்தமான அதானி எண்டர்பிரைசஸின் 1.8 கோடி பங்குகள் நேற்று ஒரே பிளாக்கில் வர்த்தகம் செய்யப்பட்டன. அதேபோன்று, அதானி கிரீன் எனர்ஜியின் 11.4 லட்சம் பங்குகள் 24 பெரிய வர்த்தக நடவடிக்கைகளின் மூலமாக கைமாறியது.
அதானி எண்டர்பிரைசஸ் பங்குகள் ரூ.2,300 கோடி மதிப்புக்கு வர்த்தகம் செய்யப்பட்டது. அதானி கிரீன் பங்குகுகள் ரூ.920 என்ற விலையில் கைமாறியது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், அதானி குழுமத்தில் ஜிகியூஜி பார்ட்னர்ஸ் 1.9 பில்லியன் டாலரை முதலீடு செய்தது. பங்குச்சந்தை தரவுகளின்படி அதானி குழுமத்தில் ஜிகியூஜி அதன் பங்குகளை 400 மில்லியனுக்கும் மேலாக அதிகரித்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.