ஆசிய மேம்பாட்டு வங்கி (ஏடிபி) 2015-16ம் நிதி ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி 6.3 சதவீதமாக இருக்கும் என்று கணித்திருக்கிறது. மணிலாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த வங்கி இதற்கு முன்பு 2015-16ம் நிதி ஆண்டில் 6 சதவீத வளர்ச்சி என்று கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆனாலும் நடப்பு நிதி ஆண்டில் 5.5 சதவீத வளர்ச்சி என்பதில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்று அந்த வங்கி தெரிவித்திருக்கிறது.
ஆசியாவின் வளர்ச்சி சீராக இருக்கும் என்று இந்த வங்கி கூறியிருக்கிறது. சீனாவின் வளர்ச்சி விகிதம் ஏற்கெனவே கணிக்கப்பட்ட அளவில் இருக்கும். 2014ல் 7.5 சதவீத வளர்ச்சியும் 2015ல் 7.4 சதவீத வளர்ச்சியும் இருக்கும். கிழக்கு ஆசியாவில் 2014 மற்றும் 2015ம் ஆண்டுகளில் 6.7 சதவீத வளர்ச்சி இருக்கும் என்று ஏடிபி தெரிவித்திருக்கிறது.