வணிகம்

பான் - ஆதார் இணைப்புக்கு ஜூன் 30-ம் தேதியுடன் அவகாசம் முடிகிறது

செய்திப்பிரிவு

புதுடெல்லி: பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் வரும் ஜூன் 30-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதற்குள், மக்கள் தங்கள் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்.

தவறும்பட்சத்தில், அவர்களது பான் கார்டு செயலிழந்துவிடும் என்று வருமான வரித்துறை எச்சரித்துள்ளது. வரிரீஃபண்ட் உள்ளிட்ட சேவைகளைபெற முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை முதல் பான் - ஆதார் இணைப்பு மேற்கொள்பவர்களுக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படுகிறது. இதற்கும் வரும் ஜூன் 30-ம் தேதி வரை காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT