வணிகம்

அந்நிய முதலீடு மேலும் அதிகரிக்கும்: யூபிஎஸ்

செய்திப்பிரிவு

கடந்த சில மாதங்களாக இந்திய பங்குச்சந்தையில் அந்நிய முதலீடு அதிகரித்து வரும் சூழ்நிலையில் அந்நிய முதலீடு 13,500 கோடி டாலர் அளவுக்கு (நிப்டி பங்குகளில்) அதிகரிக்கும் என்று யூபிஎஸ் வங்கியின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

தற்போதைய நிலைமையில் 32,000 கோடி டாலர்கள் அளவுக்கு இந்திய பங்குச்சந்தையில் அந்நிய முதலீடு இருக்கிறது. இந்த தொகை மேலும் அதிகரிக்கும் என்று யூபிஎஸ் தெரிவித்திருக்கிறது. அதே சமயத்தில் முதலீடு செய்வதற்கு ஏற்ற துறைகளும், பங்குகளும் குறைந்துகொண்டே வருகிறது என்ற அச்சத்தில் முதலீட்டாளர்கள் இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது அந்த அறிக்கை.

இருந்தாலும் இந்திய பங்குச் சந்தையில் 15,000 கோடி டாலர் அளவுக்கு அந்நிய முதலீடு இருக்கும் என்றும் இதில் 13,500 கோடி டாலர் தொகை நிப்டி பங்குகளில் முதலீடு செய்யப்படும் என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

இந்த பங்குச்சந்தை ஏற்ற இறங்கங்களை சந்தித்து ‘கன்சாலிடேட்’ ஆகி வந்தாலும் உயர்வதற்கு இன்னும் வாய்ப் புகள் இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறது. இறங்கு வதற்கு வாய்ப்பு இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு கீழே சந்தை சரியாது.

இந்திய சந்தை அதிகமான உயர்வை இன்னும் சந்திக்கவில்லை. வளர்ச்சிக்கான வாய்ப்பு இருக்கிறது. 2014-ம் ஆண்டுக்காக நிபடி இலக்கு 8000 புள்ளிகள் என்றும் யூபிஎஸ் கூறி இருக்கிறது. ஜூலை 24-ம் தேதி நிப்டி அதிகபட்சமாக 7835 புள்ளியை தொட்டது.

இருந்தாலும் இந்திய நிறுவன முதலீட்டாளர்கள் (டிஐஐ) பங்குச் சந்தையிலிருந்து தங்களது முதலீட்டை தொடர்ந்து விற்று வருகிறார்கள். நடப்பாண்டில் இதுவரை 580 கோடி டாலர் அளவுக்கு முதலீட்டை வெளியே எடுத்திருக்கிறார்கள்.

SCROLL FOR NEXT