வணிகம்

மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் ரூ.14,000 கோடிக்கு பங்குகள் விற்பனை

செய்திப்பிரிவு

பரஸ்பர நிதித் திட்டங்களை (மியூச்சுவல் ஃபண்ட்) நிர்வகிக்கும் நிறுவனங்கள் கடந்த நிதி ஆண்டில் ரூ. 14 ஆயிரம் கோடி மதிப்பிலான பங்குகளை சந்தையில் விற்பனை செய்துள்ளன.

2013-14-ம் நிதி ஆண்டில் இத்தகைய விற்பனை மேற்கொள் ளப்பட்டதாக பங்கு பரிவர்த்தனை கட்டுப்பாட்டு வாரியம் (செபி) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக மிக அதிக அளவிலான தொகை பங்குகளை மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் விற்பனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த நிதி ஆண்டில் மொத்தம் ரூ. 14,208 கோடி மதிப்பிலான பங்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. முந்தைய ஆண்டு இது ரூ. 22,749 கோடியாக இருந்தது.

மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதி ஆண்டில் தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் விற்பனை செய்துள்ள பங்குகளின் மதிப்பு அதிக அளவில் உள்ளது.

2013-14-ம் நிதி ஆண்டுடன் முடிவடைந்த ஐந்து நிதி ஆண்டுகளில் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் விற்பனை செய்துள்ள பங்குகளின் மொத்த மதிப்பு ரூ. 68 ஆயிரம் கோடியாகும்.

அதேசமயம் அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் (எப்ஐஐ) கடந்த நிதி ஆண்டில் (2013-14) இந்திய பங்குச் சந்தையிலிருந்து வெளியே எடுத்துச் சென்ற தொகை ரூ. 28 ஆயிரம் கோடியாகும். டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பு சரிந்ததால் இத்தகைய வெளியேற்றம் நிகழ்ந்ததாகத் தெரிகிறது.

2013-14-ம் நிதி ஆண்டில் மொத்தமுள்ள 12 மாதங்களில் 10 மாதங்கள் அதிகபட்ச அளவில் பங்குகளை மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் விற்பனை செய்துள்ளன.

மே மாதத்தில் அதிகபட்சமாக ரூ. 3,508 கோடிக்கும், ஆகஸ்ட் மாதத்தில் ரூ. 1,607 கோடிக்கும் பங்குகளை விற்பனை செய் துள்ளன. பங்குச் சந்தையில் அதிக புள்ளிகள் உயர்ந்த போது அதிக அளவிலான பங்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இதற்கு நேர் மாறாக கடன் சந்தையில் 2013-14-ம் நிதி ஆண்டில் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் ரூ. 5.43 லட்சம் கோடியை முதலீடு செய் துள்ளன.

மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் முதலீட்டாளர் களிடமிருந்து நிதியை வசூலித்து பங்குச் சந்தைகளில் முதலீடு செய்கின்றன. பங்குப் பத்திரங்கள், கடன் பத்திரங்களில் முதலீடு செய்கின்றன.

இப்போது மொத்தம் 1,540 நிதித் திட்டங்களை மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் நிர்வகிக்கின்றன. இதில் 1,090 நிதித் திட்டங்கள் உள்ளன.

இதில் பெரும்பாலானவை அதாவது 71 சதவீதம் கடன் பத்திரம் சார்ந்த முதலீட்டுத் திட்டங்களாகும். 23 சதவீதம்தான் வளர்ச்சியை இலக்காகக் கொண்ட முதலீட்டுத் திட்டங்களாகும்.

SCROLL FOR NEXT