வணிகம்

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 5 பைசா உயர்ந்து 82.46 ஆக உள்ளது 

செய்திப்பிரிவு

புதுடெல்லி: பங்குச்சந்தைகளின் இன்றைய (ஜூன் 9) நேர்மறையான தொடக்கம் மற்றும் வர்த்தகம் காரணமாக, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 5 காசுகள் அதிகரித்து 82.46 ஆக உள்ளது.

கச்சா எண்ணெய் விலை சரிவு மற்றும் உள்நாட்டுச் சந்தைகளில் வெளிநாட்டு நிதியின் வருகை அதிகரிப்பு போன்றவை ரூபாயின் மதிப்பு உயர்வதற்கு காரணமாக இருந்தது என்று அந்நியச் செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

அந்நியச் செலவணி சந்தையில் உள்நாட்டு அலகு 82.49 க்கு தொடங்கியது, அதிகபட்சமாக 82.45 வரை சென்றது. இறுதியில் அது 82.46 ஆக விற்பனையானது. முந்தைய நாள் மதிப்பைவிட இது 5 காசுகள் அதிகம். விழயாக்கிழமை டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 82.51 ஆக இருந்தது.

இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தில் எந்தவித மாற்றமும் இல்லை. வட்டி விகிதம் 6.5 சதவீதமாகவே தொடரும் என்று வியாழக்கிழமை அறிவித்தது. ஆர்பிஐ-ன் இந்த அறிவிப்புச் சந்தைகளின் ஒட்டுமொத்த உணர்வுகளைத் தூண்டியது என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, அடுத்தவாரம் அறிவிக்கப்பட உள்ள அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகிதம் குறித்து முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் இருக்கின்றனர்.

இந்தநிலையில், டாலருக்கு நிகரான கிரீன்பேக்கின் குறியீடு 0.04 சதவீதம் உயர்ந்து 103.38 ஆக இருந்தது. சர்வதேச கச்சா எண்ணெய் குறியீடான ப்ரெண்ட் கச்சா எண்ணெய் ப்யூச்சர் 0.50 சதவீதம் வீழ்ச்சியடைந்து ஒரு பேரல் கச்சா எண்ணெய் 75.58 டாலராக இருக்கிறது.

SCROLL FOR NEXT