வணிகம்

கடத்தூர் வாரச் சந்தையில் ரூ.8 லட்சத்துக்கு வெற்றிலை விற்பனை

செய்திப்பிரிவு

அரூர்: தருமபுரி மாவட்டம் கடத்தூர் ஞாயிறு வாரச்சந்தையில் வெற்றிலை விற்பனை நடந்து வருகிறது.

கடந்த வாரம் நடந்த சந்தையில் 128 கட்டுகளைக் கொண்ட ஒரு மூட்டை வெற்றிலை ரூ.5 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.10 ஆயிரம் வரை விற்பனையானது.

இந்நிலையில் நேற்று சந்தைக்கு வெற்றிலை வரத்து குறைவாக இருந்தது. இதனால் கடந்த வாரத்தை விட மூட்டைக்கு ரூ.2 ஆயிரம் விலை உயர்ந்தது. நேற்று ஒரு மூட்டை வெற்றிலை ரூ.5 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரை விற்பனையானது. மொத்தம் ரூ.8 லட்சத்துக்கு வெற்றிலை விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT