கோப்புப் படம் 
ஒரு நிமிட வாசிப்பு

'ஆளுநர் பாஜக பிரதிநிதியாக செயல்படுகிறார்': அமைச்சர் மா.சுப்பிரமணியன் கருத்து

செய்திப்பிரிவு

சென்னை: நீட் தேர்வு விலக்குக் கோரிய சட்ட மசோதாவை ஆளுநர் தமிழக அரசின் பேரவைத் தலைவருக்குத் திருப்பி அனுப்பி இருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வுக்கு விலக் கோரிய மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது குறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்த அவர் கூறியதாவது:

"தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசின் நீட் விலக்கு கோரிய சட்ட மசோதாவை முறைப்படி குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்திருக்க வேண்டும். மாறாக சபாநாயகருக்கே திருப்பி அனுப்பி உள்ளார்.

இதன் மூலம் ஆளுநர் பாஜக பிரதிநிதியாக செயல்படுகின்றார் என்பது தெரியவந்துள்ளது. ஆளுநரின் இந்தச் செயல் அதிர்ச்சி ஏற்பத்தியுள்ளது.

நீட் தேர்வு விலக்கு குறித்து அடுத்தக் கட்ட நடவடிக்கையாக நாளை தமிழக முதல்வர் தலைமையில் எடுக்கும் முடிவின் அடிப்படையில் தமிழக அரசு செயல்படும். நீட் தேர்வை ரத்து செய்வது தொடர்பாக நீதிமன்றம் மூலமாக அழுத்தம் கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்க உள்ளது"

இவ்வாறு அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT