கோப்புப் படம் 
ஒரு நிமிட வாசிப்பு

சாமானியர்களும் சரித்திரம் படைக்க முடியும் என்பதை நிரூபித்தவர் அண்ணா: தினகரன் புகழஞ்சலி

செய்திப்பிரிவு

சென்னை: "சாமானியர்களும் சரித்திரம் படைக்க முடியும் என நிரூபித்த தமிழகத்தின் தனிப் பெரும் தலைவர் அண்ணா" என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் புகழாரம் சூட்டியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "நம் கொள்கைத் தலைமகன், ஜனநாயகம் எனும் சக்தியைக் கொண்டு எவ்வளவு பெரிய சாம்ராஜ்ஜியத்தையும் வீழ்த்தி, சாமானியர்களும் சரித்திரம் படைக்க முடியும் என நிரூபித்த தமிழ்நாட்டின் தனிப்பெரும் தலைவர் அண்ணாவின் நினைவு நாள் இன்று.

அண்ணா வழியில் ஏற்றத்தாழ்வற்ற சமுதாயம் அமைத்திடவும் எல்லாருக்கும் எல்லாமும் கிடைத்திடவும் பாடுபட இந்நாளில் உறுதியேற்றோம்" என்று டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT