திருச்சி: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திருச்சி மாநகராட்சியில் 44 வார்டுகளில் திமுக - அதிமுக வேட்பாளர்கள் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புத் தேர்தல் பிப்.19 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இதற்காக திருச்சி மாநகரில் 238 இடங்களில் 859 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளன.
தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் ஐன.28-ம் தேதி தொடங்கியது. பிப்.4-ம் தேதி வரை விடுமுறை இல்லாத நாட்களில் வேட்புமனு தாக்கல் செய்ய அவகாசம் உள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி முறிந்த நிலையில், நேற்று திருச்சி மாவட்டத்தில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்கள் பட்டியலை அதிமுக வெளியிட்டது. இதன்படி, திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளில் போட்டியிடவுள்ள அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், திமுக சார்பில் இன்று வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. இதன்படி, திருச்சி மாநகராட்சி தேர்தலில் 1, 4, 6, 7, 9, 10, 12, 13, 14, 15, 16, 18, 19, 20, 21, 22, 25, 27, 29, 31, 32, 33, 34, 36, 35, 37, 38, 40, 42, 43, 44, 45, 46, 48, 49, 50, 52, 55, 56, 57, 58, 61, 63, 64 ஆகிய 44 வார்டுகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இதனால், திருச்சி மாநகராட்சி தேர்தலில் திமுக - அதிமுக வேட்பாளர்கள் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.