சென்னை: மக்களின் நலனே தேசத்தின் நலன் என உழைத்த உத்தமர் காந்தியடிகள் என தமிழக முதல்வர் ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
மகாத்மா காந்தியின் 74வது நினைவு தினத்தையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள காந்தியின் திருவுருவச் சிலைக்கு கீழ் அமைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மலர்களை தூவி மரியாதை செலுத்தினார். முன்னதாக தமிழக ஆளுநர் ரவி மலர்களை தூவி மரியாதை செலுத்தினார்.
இதனிடையே, காந்தியின் நினைவு தினத்தையொட்டி, முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்:
"மக்களின் நலனே தேசத்தின் நலன் என உழைத்த உத்தமர் காந்தியடிகளின் நினைவு நாளில்,
அன்பும் சகோதரத்துவமும் கொண்டு ஒற்றுமை பேணிட உறுதியேற்று, கோட்சேவின் வாரிசுகளுக்கும்
அவர்களது தீய எண்ணங்களுக்கும் நம் இந்திய மண்ணில் இடமில்லை எனச் சூளுரைப்போம்!"
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.