ஒரு நிமிட வாசிப்பு

மகாத்மா காந்தி நினைவு நாள்: முதல்வர், ஆளுநர் அஞ்சலி

செய்திப்பிரிவு

சென்னை: மகாத்மா காந்தியின் 74வது நினைவு நாளையொட்டி தமிழக முதல்வர் ஸ்டாலின், ஆளு நர் ஆர். என். ரவி ஆகியோர் அவரது படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

மகாத்மா காந்தி என மக்களால் அழைக்கப்படும் மோகன்தாசு கரம்சந்த் காந்தியின் 74வது நினைவு நாள் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. தலைவர்கள் பலரும் மகாத்மா காந்தி சிலைக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

இதனைத் தொடர்ந்து மெரினா கடற்கரையில் அமைந்துள்ள காந்தியின் திருவுருவச் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள படத்திற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

மேலும், சர்வோதயா சங்கத்தினர் நிகழ்த்திய நூற்பு வேள்வி, காந்திய இசைப்பாடல் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT