ஒரு நிமிட வாசிப்பு

சூரியக் கதிர்களைப் போலவே நேதாஜியின் புகழும் நாடெங்கும் பரவியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

செய்திப்பிரிவு

சென்னை : சூரியக் கதிர்களைப் போலயே நேதாஜியின் புகழும் நாடெங்கும் பரவியுள்ளது, அவர் காட்டிய ஒளியில் நாட்டுப்பற்றுடன் முன்னோக்கிச் செல்வோம் என தமிழக முதல்வர் ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.

சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில், சென்னையில் இன்று நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் திருவுருவச் சிலைக்கு தமிழக ஆளுநர் ரவி மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளனர்.

இதனிடையே, நேதாஜியின் பிறந்தநாளையொட்டி, முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துப் பதிவில் கூறியுள்ளதாவது:

"இந்தியாவிலுள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு நாட்டுப்பற்றின் அடையாளமாக விளங்கும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களுக்கு எனது வணக்கத்தை உரித்தாக்குகிறேன்.

சூரியக் கதிர்களைப் போலவே அவர் புகழும் நாடெங்கும் பரவியுள்ளது. அவர் காட்டிய ஒளியில் நாட்டுப்பற்றுடன் முன்னோக்கிச் செல்வோம்."

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT