கோப்புப் படம் 
ஒரு நிமிட வாசிப்பு

எனது நெருங்கிய நண்பர்களில் ஒருவரான இதழியலாளர் துரைராஜ்: ராமதாஸ் இரங்கல்

செய்திப்பிரிவு

சென்னை : மூத்த பத்திரிகையாளர் ஆசிரியர் துரைராஜ் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியை கேட்டு வேதனை அடைந்தேன் என பாமக நிறுவனர் ராமதாஸ் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியுள்ளதாவது:

மூத்த பத்திரிகையாளரும், சென்னை நிருபர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவருமான துரைராஜ் உடல்நலக் குறைவால் திருச்சியில் இன்று காலமானார் என்ற செய்தியறிந்து வேதனை அடைந்தேன். பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா, நியூஸ்டுடே, தி இந்து, ஃபிரண்ட் லைன் உள்ளிட்ட ஆங்கில இதழ்களில் பணியாற்றிய துரைராஜ் எனது நெருங்கிய நண்பர்களில் ஒருவர்.

பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்ட நாள் முதல் பாமக தொடர்பான செய்திகளை சேகரித்து வெளியிட்டு வந்தவர். பாமக வளர வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறை கொண்டவரின் மறைவு வருத்தமளிக்கிறது.மூத்த பத்திரிகையாளர் துரைராஜ் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்."

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT