சென்னை: "உடல்நலனோடும், மகிழ்ச்சியோடும், வெற்றியோடும் திகழ வாழ்த்துகிறேன்” என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று தனது 67-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளையொட்டி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜிரிவால் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளனர்.
மம்தா பானர்ஜி பிறந்தநாளையொட்டி, தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "சகோதரி மம்தா பானர்ஜி அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
மேற்கு வங்க மக்களின் வாழ்வை உயர்த்தும் தங்களது பயணத்தில் தாங்கள் உடல்நலனோடும், மகிழ்ச்சியோடும் வெற்றியோடும் திகழ வாழ்த்துகிறேன்" என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.