சென்னை: தமிழரைத் தலைநிமிரச் செய்த திருக்குறளுக்கு அவமரியாதை இனிமேல் நடக்காமலிருப்பதற்கான நடவடிக்கை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து அக்கட்சியின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்:
"எதிர்க்குரல் எழுந்தபிறகே டி.என்.பி.எஸ்.சி தேர்வு பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்ட திருக்குறளானது மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது.
தமிழரைத் தலைநிமிரச் செய்த நூல்களுக்கு இதுபோன்ற அவமரியாதை இனிமேல் நடக்காமலிருப்பதற்கான உரிய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளவேண்டும் என மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது."
இவ்வாறு மநீம தெரிவித்துள்ளது.