கோப்புப் படம் 
ஒரு நிமிட வாசிப்பு

வருண் சிங் மறைந்தார் என்ற செய்தியறிந்து வருத்தமடைந்தேன்: டிடிவி தினகரன்

செய்திப்பிரிவு

குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் படுகாயமடைந்த நிலையில் சிகிக்கை பெற்றுவந்த கேப்டன் வருண் சிங் மறைந்த செய்தியறிந்து வருத்தமடைந்ததாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியுள்ளதாவது:

"குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த கேப்டன் வருண் சிங் மறைந்தார் என்ற செய்தியறிந்து வருத்தமடைந்தேன்.

துயரம் மிகுந்த அவ்விபத்தில் இருந்து கேப்டன் வருண் சிங் மட்டுமாவது உயிர் பிழைத்துவிடுவார் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில், அந்த நம்பிக்கை பொய்த்தது வேதனையளிக்கிறது. அவரது குடும்பத்திருனருக்கும், ராணுவத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்."

இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT