அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, தா.மோ.அன்பரசன் ஆகியோர் கண்காட்சியைப் பார்வையிட்ட படம். 
ஒரு நிமிட வாசிப்பு

14-வது சர்வதேச மெஷின் டூல்ஸ் கண்காட்சி: அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தனர்

செய்திப்பிரிவு

அம்பத்தூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர் சங்கத்தில் 14-வது சர்வதேச மெஷின் டூல்ஸ் கண்காட்சியை அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, தா.மோ.அன்பரசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

"சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்று (9.12.2021) அம்பத்தூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் சார்பில் ACMEE 2021 14-வது சர்வதேச மெஷின் டூல்ஸ் கண்காட்சி நடைபெற்றது.

இதில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் கலந்துகொண்டு கண்காட்சியைத் தொடங்கி வைத்தனர். மேலும் கண்காட்சியில் இடம்பெற்று இருந்த பொருட்களைப் பார்வையிட்டனர்.

இந்நிகழ்வில், அம்பத்தூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகள் மற்றும் தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்."

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT