கோப்புப் படம் 
ஒரு நிமிட வாசிப்பு

டிச.7-ம் தேதி சென்னையில் எங்கெங்கு ஒரு நாள் மின் தடை?- மின்வாரியம் அறிவிப்பு

செய்திப்பிரிவு

டிசம்பர் 7-ம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று சென்னை எண்ணூர் பகுதியில் ஒரு நாள் மின் தடை விதித்து தமிழ்நாடு மின் வாரியம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

"சென்னையில் 07.12.2021 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வாரியப் பராமரிப்புப் பணி காரணமாக குறிப்பிட்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

மாலை 4 மணிக்குள் பராமரிப்புப் பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

எண்ணூர் பகுதி: கத்திவாக்கம், எண்ணூர் பஜார், காட்டுக்குப்பம், நேரு நகர், அண்ணா நகர், காமராஜ் நகர், எஸ்.வி.எம் நகர், வ.உ.சி நகர், எண்ணூர் குப்பம், தாழங்குப்பம், எர்ணாவூர் குப்பம், இ.டி.பி.எஸ் வாரியக் குடியிருப்புப் பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.

குறிப்பிட்ட நேரத்திற்கு இவ்விடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்''.

இவ்வாறு தமிழ்நாடு மின்வாரியம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT