நெல்லை மாவட்டம் நம்பியாறு அணையில் இருந்து நவம்பர் 29-ம் தேதி முதல் தண்ணீர் திறக்க தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் (பொதுப்பணித்துறை) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
"நெல்லை மாவட்டம் திசையன்விளை அடுத்துள்ள நம்பியாறு அணையிலிருந்து வலது மற்றும் இடது மதகுகளின் பிரதான கால்வாயின் கீழ் பாசனம் பெறும் நேரடி மற்றும் மறைமுக பாசனப் பரப்பு நிலங்களுக்கு நவ.29-ம் தேதி பிசான சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்படும்.
விநாடிக்கு 60 கன அடிக்கும் மிகாமல் 28.03.2022 வரை நீரானது திறக்கப்படும் என அரசு ஆணையிட்டுள்ளது. இதன் மூலம் நெல்லை மாவட்டம் திசையன்விளை மற்றும் ராதாபுரம் பகுதியில் உள்ள 1,744.55 ஏக்கர் பாசனப்பரப்பு பயன் பெறும்."
இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.