கோப்புப் படம் 
ஒரு நிமிட வாசிப்பு

நாமக்கல்லில் முட்டை விலை 15 காசுகள் சரிவு

செய்திப்பிரிவு

கார்த்திகை மாதத்தையொட்டி, வெளி மாநிலத்திற்கான ஏற்றுமதி குறைந்ததால் நாமக்கல் மாவட்டத்தில் முட்டை ஒன்றின் விலை 15 காசுகள் சரிவடைந்துள்ளது.

இதுகுறித்து நாமக்கல் கோழிப் பண்ணையாளர்கள் சங்கம் கூறுகையில், ''நாமக்கல் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் முட்டை ஒன்றின் விலை 15 காசுகள் சரிந்து ரூ.4.50 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கார்த்திகை மாதத்தையொட்டி, விற்பனை மற்றும் வெளி மாநில ஏற்றுமதி குறைந்துள்ளதால் விலை குறைந்துள்ளது'' என்று தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT